உடல் நலம் குன்றிய தந்தைக்கு மகள் ஆற்றிய உதவி - ஆயிரத்து 200 கிலோ மீட்டர் சைக்கிள் ஒட்டிய சிறுமிக்கு, அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா பாராட்டு

May 23 2020 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு காரணமாக காயமடைந்த தந்தையை, ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வைத்து ஒட்டிச் சென்ற சிறுமிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக ஹரியானாவில் காயங்களுடன் சிக்கித் தவித்து வந்த தந்தையை, அவரது மகள் ஜோதி குமாரி, சைக்கிளில் வைத்து ஆயிரத்து 200 கிலோமீட்டர் பயணித்து, சொந்த ஊரான பீகாருக்கு சென்றடைந்தார். 15 வயதான இந்த சிறுமியின் செயல் அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக சிறுமிக்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். சிறுமியின் சைக்கிள் ஓட்டும் திறமையை பாராட்டிய இந்திய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பு, ஊரடங்கிற்கு பின், அவரை பயிற்சிக்கு அழைத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள், இவாங்கா டிரம்ப், சிறுமி ஜோதி குமாரிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "15 வயது சிறுமியின் சகிப்புத்தன்மை மற்றும் தந்தை மீதான அன்பு, இந்திய மக்களின் இதயங்களையும், சைக்கிள் பந்தைய கூட்டமைப்புயும் வெகுவாக கவர்ந்துள்ளதாக பாராட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00