கொரோனா ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்‍கு நடந்தே சென்ற விவகாரம் - மத்திய-மாநில அரசுகளின் தோல்வியைக்‍ காட்டுவதாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

May 27 2020 2:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்‍கு செல்ல முடியாமல் தத்தளித்து, வேறு வழியின்றி குடும்பம் குடும்பமாக நடந்தே சென்ற அவலத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர வழக்‍காக விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகளுக்‍கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்‍கு நடைபயணமாகவே சென்றனர். இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக்‍ பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து வழக்‍கு விசாரணை நடத்தியது. அப்போது, புலம்பெயரும் தொழிலாளர்களின் பரிதாப நிலை குறித்து நாள்தோறும் ஊடகங்களிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன - நீண்ட தூரம் நடைபயணமாக செல்லும் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு உரிய உணவு கூட வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது - இவர்களுக்கு மத்திய-மாநில அரசுகளின் உதவி தற்போதைய நிலையில் தேவைப்படுவதாகத் தெரிவித்தனர்.

புலம்பெயரும் தொழிலாளர்களின் துன்பங்கள் மற்றும் பரிதாப நிலை தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கும் பல தரப்பிலிருந்து கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளதாகத் தெரிவித்த அமர்வு, இன்றளவிலும் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் சாலைகளிலும், ரயில் நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகளிலும் பரிதவித்து வருவது குறித்த தகவல்கள் வருவதாகத் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களுக்‍கு உடனடியாக உணவு, உறைவிடம், போக்குவரத்து வசதி ஆகியவற்றை அரசுகள் வழங்க வேண்டியது அவசியமாகி உள்ளது - மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தாலும் இன்னும் குறைபாடுகள் உள்ளன - இந்த விவகாரத்தில் இன்னும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என நீதிமன்றம் கருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளும் அவசரமாக பதில் அளிக்க வேண்டும் என்றும், நாளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00