இந்தியா - சீன எல்லையில் தொடரும் பதற்றம் - ராணுவ உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோதி முக்‍கிய ஆலோசனை

May 27 2020 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
லடாக்‍ எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்‍கும், சீனப் படையினருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, போர் பதற்றம் வலுவடைந்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், முப்படைகளின் தலைவர் ஜெனரல் Bipin Rawat மற்றும் முப்படைத் தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.

லடாக்‍ எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்‍கும் சீனப் படையினருக்‍கும் இடையே கடந்த 9-ம் தேதி ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் நூற்றுக்‍கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து, இரு நாடுகளின் முக்‍கிய தளபதிகள் அளவிலான பல சுற்று பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தன. லடாக்‍ பகுதியின் Galwan பள்ளத்தாக்‍கையொட்டியுள்ள சீன எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் அந்நாட்டு ராணுவம் நூற்றுக்‍கும் மேற்பட்ட கூடாரங்களை அமைத்து வருகிறது. பதுங்கு குழிகளை அமைப்பதற்கான இயந்திர சாதனங்களையும் குவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 22-ம் தேதி இந்திய ராணுவத் தலைமை தளபதி MM நரவனே, லே-யில் உள்ள ராணுவத் தலைமையகத்திற்கு விரைந்தார். உயர் தளபதிகளுடன் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்‍கைகள் குறித்து முக்‍கிய ஆலோசனை நடத்தினார்.

தற்போது லடாக்‍ எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைவர் ஜெனரல் Bipin Rawat மற்றும் முப்படைத் தலைமைத் தளபதிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், பாதுகாப்புத் துறை தலைவர் மற்றும் முப்படைத் தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் வெளியுறவுத்துறை செயலர் திரு. Harsh Vardhan Shringla-வுடன் பிரதமர் தனியாக ஆலோசனை நடத்தினார். இதனிடையே, எந்தத் தாக்‍குதலையும் முறியடிக்‍க இந்தியா தயார் நிலையில் இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00