கொரோனாவை கண்டு அச்சமடையாமல் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை பொதுமக்‍கள் மேற்கொள்ள வேண்டும் - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தல்

Jun 29 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்றை பார்த்து அச்சமடையாமல், முன்னெச்சரிக்‍கை தடுப்பு நடவடிக்‍கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்‍களுக்‍கு குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாத நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள அழுத்தம் மற்றும் நெருக்‍கடிக்‍கு இடையே, வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முன் எப்போதும் கண்டிராத இந்தச் சுகாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உரிய போராட்டத்தில் மக்கள் ஒற்றுமையாகப் பங்கேற்க வேண்டும் என்றும், வைரஸ் தொற்றை கண்டு அச்சமடையாமல், முன்தடுப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார். முகக்‍கவசம் அணிவதுடன், சரியான உணவு வகைகளை உட்கொண்டு, உடற்பயிற்சிகளைச் செய்து நோய் எதிர்ப்பு சக்‍தியை அதிகரிக்‍க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00