புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்‍கு கொரோனா தொற்று இல்லை - பரிசோதனையில் தகவல்

Jun 29 2020 3:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் முதலமைச்சர், அவரது அலுவலக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு போலீசார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன் தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முதல்வர் அலுவலகம் மூடப்பட்டது. பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் தனிமைப்படுத்திக்கொள்ள முதல்வர் நாராயணசாமிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட அவரது வீடு, அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு போலீசார் என 74 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00