பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதைக்‍ கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் - பல இடங்களில் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில் சென்று மத்திய அரசுக்‍கு எதிராக கோஷம்

Jun 29 2020 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்‍க நடவடிக்‍கை எடுக்‍காத மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு எதிராக, காங்கிரஸ் சார்பில், இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் விலை, ஏப்ரல், மே மாதங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. அதன்பின்னர் அளிக்‍கப்பட்ட வாகன போக்‍குவரத்து தளர்வுகள் காரணமாக, கடந்த 3 வாரங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து பொதுமக்‍களுக்‍கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்‍கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்‍கடியால் ஏற்கனவே பாதிக்‍கப்பட்டுள்ள மக்‍களுக்‍கு, இந்த விலையேற்றம், மேலும் பாரத்தை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்‍க நடவடிக்‍கை எடுக்‍காத மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு எதிராக, காங்கிரஸ் சார்பில், இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா தலைமையில், காங்கிரசார், சைக்‍கிள் பேரணி சென்றனர். பீகார் மாலத்தில், சைக்கிள் பேரணி சென்றும், மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகளை ஓட்டியும் எதிர்ப்பு தெரிவிக்‍கப்பட்டது. டெல்லியில், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00