இந்தியா - சீனா இடையேயான எல்லை விவகாரம் - இரு நாடுகளின் கமாண்டர்கள் அளவிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

Jun 30 2020 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை தொடர்பாக, இரு நாடுகளின் கமாண்டர்கள் அளவில் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய - சீன வீரர்களிடையே, கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்த மோதலால், இரு நாடுகளுக்குமிடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. அதே நேரத்தில், பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவு எட்டப்படாத நிலையில், இருநாட்டு ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில், முன்னேற்றம் ஏற்பட்டதாக இரு நாடுகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் இடையே 3-ம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தை லடாக்கின் ஹூஷுல் பகுதியில் இன்று காலை 10 முப்பது மணியளவில் நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00