கொரோனா நோயாளிகளையும், வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களையும், மனித நேயத்துடன் கையாள வேண்டும் : கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள்

Jul 1 2020 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நோயாளிகளையும், வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களையும், மனித நேயத்துடன் கையாள வேண்டும் என மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்‍கு கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பல்லாரியில், கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் உடல்களை, சுகாதாரப்பணியாளர்கள் சிலர், திறந்த வெளியில் குழிதோண்டி, தூக்‍கி வீசி சென்றனர். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து ஊழியர்கள் மீதும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என கர்நாடக சுகாதாரத்துறை கூறியது. இதுகுறித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா, பல்லாரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஊழியர்கள் அடக்கம் செய்த விதம், மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகளையும், வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களையும், மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள், மனித நேயத்துடன் கையாள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00