ஆகஸ்டு 1ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் : காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

Jul 2 2020 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் உள்ள அரசு பங்களாவை வரும் ஆகஸ்டு 1ம் தேதிக்குள் காலி செய்யுமாறு, காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு முதல் டெல்லி வி.ஐ.பி., பகுதியில் உள்ள அரசு பங்களாவில் பிரியங்கா, தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருக்கும் தனிநபர் என்பதால் பிரியங்காவுக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கான வாடகையாக 700 ரூபாயை அவர் செலுத்தி வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு குழு அமைப்பால் கொடுக்கப்பட்ட பாதுகாப்பை, மத்திய பா.ஜ.க அரசு திரும்ப பெற்றது. பிரதமருக்கும் அவருடன் அவரது வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் எஸ்.பி.ஜி.பாதுகாப்பு வழங்கப்படும். முன்னாள் பிரதமர்களை பொருத்தவரை அவருக்கும் அவருடன் அவரது வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பதவியிலிருந்து விலகியது முதல் ஐந்து ஆண்டுகள் வரை எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில், சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேறியது. இந்நிலையில், பிரியங்காவுக்கு அரசு பங்களா ஒதுக்கீடு செய்ததை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் சமீபத்தில் தான் ரத்து செய்தது. இதனையடுத்து அரசு பங்களாவை வரும் ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு பிரியங்காவுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00