முலாயம் சிங் மருமகள் அபர்ணாவுக்கு போலீஸ் பாதுகாப்பு : விரைவில் பா.ஜ.க.,வில் இணைய உள்ளதாக தகவல்

Jul 4 2020 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
சமாஜ்வாதி கட்சி நிறுவனர் திரு. முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் திருமதி. அபர்ணாவுக்கு, உத்தர பிரதேச மாநில அரசு, போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து அவர், பா.ஜ.க.,வில் சேர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தர பிர‍தேசத்தில், திரு. முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி, பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. திரு. முலாயம் சிங்கின் இளைய மகன், திரு. பிரதீக் யாதவின் மனைவி திருமதி. அபர்ணா, சமீப காலமாகவே, பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இவர், உத்தர பிரதேசத்தில், 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் உள்ள திருமதி. அபர்ணா, அவருக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமதி. அபர்ணாவுக்கு, 'ஒய்' பிரிவின் கீழ், சிறப்பு பாதுகாப்பு வழங்கி, முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, உத்தர பிரதேசத்தில், 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, அவர், பா.ஜ.க,வில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00