பிரதமரின் அறிவிப்புக்‍காக கோவேக்‍சின் ஆய்வை வேகப்படுத்தக்‍கூடாது : மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி வலியுறுத்தல்

Jul 4 2020 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
Covaxin தடுப்பூசி குறித்த அறிவிப்பை சுதந்திரத் தினத்தன்று பிரதமர் அறிவிப்பதற்காக அதன் பரிசோதனையை வேகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடக்‍ கூடாது என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.சீதாரம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், Bharat Biotech நிறுவனமும் சேர்ந்து உருவாக்கியுள்ள Covaxin தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதிக்க நாடுமுழுவதும் சிலகுறிப்பிட்ட மருத்துஆராய்ச்சி மையங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்த பரிசோதனையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டாயமாக பரிசோதனை செய்து முடிக்க வேண்டுமெனவும், அப்படி செய்யத்தவறினால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஐ.சி.எம்.ஆர். அமைப்பு நெருக்கடி கொடுத்துள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி, சுதந்திர தினத்தன்று திரு.மோதி கொரோனாவுக்கான தடுப்பூசியை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதாக அறிவிப்பதற்காக மருத்துவ அறிவியல் செயல்முறைகளை தேவைக்கேற்ப வேகப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் உள்ளபோது, சுதந்திர தினத்தன்று பிரதமர் அறிவிக்க வேண்டும் என்பதற்காக அறிவியல் செயல்முறைகளை ஐ.சி.எம்.ஆர். வேகப்படுத்துகிறது என்றும் இது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00