கொரோனா தடுப்பு நடவடிக்‍கையில் நரேந்திர மோதி அரசு படுதோல்வி அடைந்துவிட்டது - ராகுல் காந்தி குற்றச்சா‌ட்டு

Jul 7 2020 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையில் நரேந்திர மோதி அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கை குறித்து, பிரதமர் திரு. நரேந்திர மோதி நாட்டு மக்‍களுக்‍கு உரையாற்றியதை சுட்டிக்‍காட்டியுள்ளார்.

மஹாபாரதப் போர் 18 நாட்களில் முடிவுக்‍கு வந்ததைப் போன்று, கொரோனா வைரசும், 21 நாட்களில் முடிவுக்‍கு வந்துவிடும் என்று, கடந்த மூன்றரை மாதங்களுக்‍கு முன்பு, பிரதமர் திரு. நரேந்திர மோதி, நாட்டு மக்‍களிடம் தெரிவித்ததாகக்‍ குறிப்பிட்டுள்ள திரு. ராகுல் காந்தி, பிரதமரின் அந்தப் பேச்சு தொடர்பான வீடியோவையும் தனது ட்விட்டர் பதிவில் இணைத்துள்ளார். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி, உலகம் முழுவதும் வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்‍கா மற்றும் Brazil-லுக்‍கு அடுத்தபடியாக இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ள திரு. ராகுல்காந்தி, இதுதொடர்பான வரைபட விவரங்களையும் வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே பண மதிப்பிழப்பு நடவடிக்‍கை, GST வரி அமலாக்‍கம் ஆகியவற்றில் படுதோல்வியடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோதி, தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையிலும் மிகப்பெரிய தோல்வியை அடைந்திருப்பதாக திரு. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00