ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் - முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் பணிநீக்‍கம்

Jul 7 2020 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் திரு. பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் பணிநீக்‍கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த மாதம் 30-ம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்தது. இந்தத் தகவலை அறிந்த சுங்கத்துறையினர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, ஐக்கிய அரபு அமீரக தூதரக அலுவலகத்தில் சோதனையிட்டனர். அப்போது, சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புடைய 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவத்தில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் என்பவர் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்‍கப்பட்டார். இந்நிலையில், இந்த கடத்தல் விவகாரத்தில் கேரள முதலமைச்சர் திரு.​ பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் சிவசங்கரன், அப்பதவியில் இருந்து நீக்‍கப்பட்டுள்ளார். அவர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பச் செயலாளராகவும், முதலமைச்சரின் தனிச்செயலாளராகவும் பதவி வகித்து வந்த நிலையில், முதலமைச்சரின் தனிச்செயலாளர் பதவியிலிருந்து பணி நீக்‍கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, இக்‍கடத்தல் சம்பவம் முதலமைச்சரின் கவனத்திற்கு செல்லாமல் நடந்திருக்‍காது என குற்றம்சாட்டியுள்ள கேரள காங்கிரஸ், சிபிஐ விசாரணைக்‍கு உத்தரவிட வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00