சீன எல்லையில், இந்திய விமானப்படை போர் விமானங்கள் மேற்கொண்ட தீவிர ரோந்து பணி - பரபரப்பு வீடியோ பதிவு வெளியீடு

Jul 7 2020 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய - சீன எல்லையில், இந்திய விமானப்படை போர் விமானங்கள் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதன் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்‍கு லடாக்‍கின் கல்வான் பள்ளதாக்‍கு பகுதியில் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதலையடுத்து பதற்றம் நிலவுகிறது. பதற்றத்தை தணிக்‍க, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் காரணமாக, லடாக்‍ எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முன்னணி நிலைகளில் நிறுத்தப்பட்டிருந்த சீன வீரர்கள் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர்.

இருந்தபோதிலும் தனது எல்லைக்‍கு உட்பட்ட பகுதியில், சீனா, சுமார் 20 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளதாகவும், அதிநவீன தாக்‍குதல் வாகனங்களை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், லடாக் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இந்தியா, அங்கு அதிநவீன சரத் BMP-2 ரக வாகனங்களை நிறுத்தியுள்ளது. மேலும், இந்திய போர் விமானங்களான மிக் -29, சுகோய்-30, எம்.கே.ஐ. அப்பாச்சி ஆகியவை, எல்லையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. நேற்று இரவு நடைபெற்ற ரோந்து பணியின் வீடியோ காட்சிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00