இந்திரா காந்தி, ராஜீவ் அறக்‍கட்டளைகளுக்‍‍கு பணம் பெற்ற விவகாரம் : சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் விசாரணை

Jul 8 2020 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி தலைமையிலான இரண்டு ராஜீவ்காந்தி அறக்‍கட்டளைகள் மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு அறக்‍கட்டளை ஆகியவற்றிற்கு முறைகேடாக வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லடாக்‍ எல்லையில் சீனாவுடனான மோதல் குறித்து ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருவதையடுத்து, காங்கிரஸ் கட்சி சீனாவிடம் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி தலைமையில் செயல்படும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் செயல்படும் இரண்டு அறக்‍கட்டளைகள் மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் செயல்படும் அறக்கட்டளை ஆகியவற்றுக்‍கு சீனாவிடமிருந்து முறைகேடாக பணம் பெற்றதாக பா.ஜ.க. தலைவர் திரு. நட்டா குற்றம் சாட்டினார்.

1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி அறக்‍கட்டளைக்‍கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்‍கப்பட்டதாகவும், தொடர்ந்து 2005ம் ஆண்டு சீன தூதரகத்திடமிருந்து இந்த அறக்‍கட்டளைக்‍கு நன்கொடை பெறப்பட்டதாகவும் நட்டா தெரிவித்துள்ளார். இந்த பணப் பரிவர்த்தனை முறைகேடுகள் குறித்து, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், வருமான வரி ஏய்ப்பு, வெளிநாட்டு பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் விசாரணை மேற்கொள்ளப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00