கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் தங்க கடத்தல் விவகாரம் - முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

Jul 8 2020 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் தங்கம் கடத்தல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என எதிர்க்‍கட்சிகள் போர்க்‍கொடி தூக்‍கியுள்ளன.

கேரளா அரசியலில் பெண்களால் பிரச்சினை ஏற்படுவது வழக்கம். அது கேரளாவிற்கு பிடித்த சாபக்கேடோ என்னவோ தெரியவில்லை. காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் அந்த ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க யாராவது ஒரு பெண் முளைத்து விடுகிறார். முன்னாள் முதல்வர் திரு. உம்மன் சாண்டி ஆட்சி காலத்தில், சோலார் பேனல் வழக்கில், சரிதா நாயர், கண்ணில் விரலை விட்டு ஆட்டினார். தற்போது, முதல்வர் திரு. பினராயி விஜயன் கண்ணில் துரும்பாக விழுந்திருக்கிறார் ஸ்வப்னா சுரேஸ்.

கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரியான ஸ்வப்னாவின் தங்கம் கடத்தல் விவகாரம், அம்மாநில அரசுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்து வருகிறது. அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்ட ஸ்வப்னா, 100 கோடி ரூபாய் அளவுக்கு தங்க கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

கேரள அரசின் தகவல் தொழில் நுட்ப துறையின் உயர் பதவிக்கு ஸ்வப்னா சுரேஷ் நியமிக்கப்பட்டது எப்படி என காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதில் முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். குற்றச்சாட்டுக்கு ஆளான முதல்வரின் முதன்மை செயலர் சிவசங்கர், அதிரடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கேரளாவில் தங்கம் கடத்தல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என எதிர்க்‍கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00