மத்தியப்பிரதேச பாணியில் கவிழ்கிறதா ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு - 25 ஆதரவு எம்.எல்.ஏ.க்‍களுடன் சச்சின் பைலட் டெல்லியில் முகாம்

Jul 12 2020 2:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்தியப்பிரதேசத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசிலும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. அதிருப்தியில் உள்ள துணை முதலமைச்சர் சச்சின் பைலட், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 25 பேருடன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, சுயேட்சைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இருப்பினும், முதலமைச்சர் பதவியைப் பெற மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே போட்டி நிலவியது. இதனைத் தொடர்ந்து, அசோக் கெலாட் முதலமைச்சராகவும், சச்சின் பைலட் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இருப்பினும், இருவருக்கும் இடையேயுள்ள விரிசலை பயன்படுத்தி, பா.ஜ.க. ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, மாநில அரசின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியை கவிழ்க்க உதவினால், 1000 கோடி ரூபாய் முதல் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என, அவர்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக காங்கிரசை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதனால் ராஜஸ்தான் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சர் சச்சின் பைலட், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 25 பேருடன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள், அனைவரும் காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தியை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00