ஸ்வப்னா கைது விவகாரம் - பயங்கரவாத நடவடிக்‍கைகளுக்‍காகவே தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ., குற்றச்சாட்டு

Jul 14 2020 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -
பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில், சரக்கு விமானத்தில் 30 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகிய இருவரை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் அண்மையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கைது செய்தனர். இருவரும் கொச்சியில் உள்ள NIA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இதுவரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சார்பில் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தங்க கடத்தலுக்காக அரபு அமீரகத்தின் முத்திரைகள் போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் தங்க கடத்தல் சம்பவத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் என்.ஐ.ஏ. சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரையும் 21ம் தேதி வரை 8 நாட்கள் என்.ஐ.ஏ. காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00