கொரோனாவை கட்டுப்படுத்த பெங்களூருவில் இன்றுமுதல் முழு ஊரடங்கு - வரும் 22-தேதி வரை அமலில் இருக்கும்

Jul 14 2020 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனாவை கட்டுப்படுத்த பெங்களூருவில் இன்று இரவு முதல் வரும் 22-தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது.

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் கர்நாடகா 5-வது இடத்தில் உள்ளது. அங்கு 41 ஆயிரத்து 581 பேர் நோய்த்தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், 759 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைள் எடுத்தும், வைரஸ் தொற்றை கட்டுக்குள் வரவில்லை. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் திரு. எடியூரப்பா அறிவித்துள்ளார். அதன்படி, இன்று இரவு 8 மணி முதல் வரும் 22-ந் தேதி அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கின் போது அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பெங்களூருவிலிருந்து ஏராளமானோர் கிடைத்த வாகனங்களில் சொந்த ஊர் திரும்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00