இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 10 லட்சத்தை நெருங்குகிறது

Jul 16 2020 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்‍கம் நாளுக்‍கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளும், மத்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. எனினும், கொரோனா பரவலின் தாக்‍கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 606 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 32 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 876-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 915-ஆக உயர்ந்துள்ளது. 6 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00