நிலத்தை காலி செய்ய மறுத்த விவசாய குடுத்தினர் மீது கொடூர தாக்‍குதல் - போலீசார் முன்னிலையிலேயே விஷம் குடித்த தம்பதி

Jul 16 2020 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்தியப் பிரதேசத்தில் நிலத்தை காலி செய்ய மறுத்த விவசாயக் குடும்பத்தினரை காவலர்கள் மிக கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் வசித்து வரும் ராம்குமார், சாவித்ரி தேவி தம்பதியினர் அங்குள்ள நிலத்தில் பயிர்செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு கல்லூரி கட்ட​வேண்டும் என்பதால் நிலத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அங்கே பயிர்கள் விளைவிக்கப்பட்டுள்ளதால் அந்த நிலத்தை காலி செய்ய ராம்குமார் மறுத்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து, அந்த பகுதிக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் உள்ள பயிர்களை அகற்றியுள்ளனர். இதனால் வருத்தமடைந்த விவசாயி ராம்குமார் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் காவலர்கள் முன்னிலையிலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள், அவர்களை மிகவும் கொடூரமாக தாக்‍கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00