டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் இடையே மோதல் - மூன்றாம் கட்ட தளர்வுகளுக்‍கு ஒப்புதல் தர ஆளுநர் மறுப்பு

Aug 1 2020 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு தளர்வு விவகாரத்தில் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கின் மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில், பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, மாநில‍ங்களின் சூழ்நிலைக்கேற்றபடி ஊரடங்கு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இதன்படி, டெல்லியில், உணவகங்கள், வாரச்சந்தைகளை திறக்க ஊரடங்கு தளர்வில் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு துணைநிலை ஆளுநர் திரு. அனில் பைஜால் ஒப்புதல் தர மறுத்துள்ளார். தேசிய பேரிடர் மேலாண்மையின் மத்திய அரசின் பிரதிநிதி, துணைநிலை ஆளுநர் என்பதால், டெல்லி அரசு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த தடை விதிக்கும் அதிகாரம் உள்ளதாக, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00