இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்‍கும் கொரோனா - கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று

Aug 1 2020 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 57 ஆயிரத்து 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச பாதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்து 95 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மட்டும் 764 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 511-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 5 லட்சத்து 65 ஆயிரத்து 103 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00