கேரள தங்கக்கடத்தல் விவகாரம் - முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனை சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுக்க திட்டம்

Aug 4 2020 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முதலமைச்சர் திரு.பிரனாயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் திரு.சிவசங்கரை சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர்.

கேரளா தங்கக்கடத்தல் வழக்கை என்.ஐ.ஏ. மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கராணி என்று வர்ணிக்கப்படும் ஸ்வப்னா உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை, என்.ஐ.ஏ. மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே 3 முறை காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது மீண்டும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிவசங்கர் ஏற்கனவே அளித்த வாக்குமூலங்களில் முன்னுக்கு பின் முரண்பாடு உள்ளது என்பது குற்றச்சாட்டாகும். இதனிடையே ஸ்வப்னாவின் 32 பக்க வாக்குமூலத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஸ்வப்னா குறிப்பிட்ட முக்கிய அரசியல் புள்ளியிடம் விரைவில் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இதனிடையே துணை தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி கடத்தப்பட்ட தங்கம் காஷ்மீரில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிக்க பயன்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தங்கத்தை சென்னை விமான நிலையம் வழியாக கடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை மற்றும் திருச்சியில் விசாரித்து வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமான 3 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00