வெள்ளத்தால் தத்தளிக்‍கும் மும்பையை மேலும் வதைக்‍கும் கனமழை - சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை நீடிக்‍கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

Aug 6 2020 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து வலுத்து வருவதால், மஹாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது. அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள 16 சிறப்பு குழுக்‍கள் அமைக்‍கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை பயங்கர சூறாவளியுடன் கனமழை கொட்டியது. 15 வருடங்களில் இல்லாத அளவுக்‍கு பெய்த இந்த மழையால் மும்பை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.பல இடங்களில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலைகளில் மூடிக்‍கிடப்பகதை காணமுடிகிறது. மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மும்பை நகரில் உள்ள விஹார் மற்றும் துளசி ஏரிகள் அபாய அளவைத் தாண்டி நிரம்பி வழிகின்றன. நிலைமை மோசமாவதைத் தடுக்‍க பாதிக்‍கப்பட்ட பகுதிகளில் 16 மீட்புக் குழுக்‍கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் கர்நாடகாவிலும் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்குவதால், குடகு மாவட்டம் முழுவதும் வெள்ளத்தின் பிடியில் சிக்‍கியுள்ளது. அங்குள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் மட்டம் அபாய அளவைத் தாண்டி இருப்பதா மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹசன் மாவட்டத்திலுள்ள ஹேமாவதி நதியிலும் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00