வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு

Aug 6 2020 2:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய, ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்தி காந்த தாஸ், வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என்றும், இதனால் வீடு, வாகனங்களுக்‍கான கடன் விகிதத்திலும் மாற்றமிருக்காது என்றும் தெரிவித்தார். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3 புள்ளி 3 சதவீதமாகவே தொடரும் என்றுக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டெழத் தொடங்கியுள்ளதாகவும், இந்திய பொருளாதாரம் ஏப்ரல் - மே மாதம் ‌முதல் உயர தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2020 - 2021-ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்பை விட குறையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளதாகவும், நாட்டில் போதியளவு பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் உறுதி செய்துள்ளதாகவும் திரு. சக்திகாந்த தாஸ் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00