பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் 88 ஆயிரம் ஊழியர்களும் துரோகிகள் - அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற பா.ஜ.க. எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை

Aug 12 2020 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அனைவரும் துரோகிகள் எனவும், அந்நிறுவனத்தில் பணிபுரியும் 88 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் எனவும், கர்நாடக மாநில பா.ஜ.க. எம்.பி. ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அனந்த் குமார் ஹெக்டே, "கும்டா" பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பி.எஸ்.என்.எல். நிறுவனம் நாட்டின் கரும்புள்ளியாக மாறிவிட்டதாகவும், அந்நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் 88 ஆயிரம் ஊழியர்கள், விரைவில் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனத் தெரிவித்த அவர், அந்நிறுவனத்தை தனியார் மயமாக்கி ஒழுங்குப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்தை, கர்நாடக மாநில பா.ஜ.க.வும் ஆதரித்துள்ளது. "ஹெக்டேவின் கருத்துகள் உண்மையானது எனவும், பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் திறமையின்மை குறித்தே அவர் கூறியிருப்பதாகவும், கர்நாடக மாநில பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் திரு.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00