குடியரசு முன்னாள் தலைவர் ​பிரணப் முகர்ஜிக்‍கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை- வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரணப் மகன் வேண்டுகள்

Aug 13 2020 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியரசு முன்னாள் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என, அவரது மகன் திரு. அபிஜித் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

குடியரசு முன்னாள் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான திரு.பிரணாப் முகர்ஜி, உடல்நலம் பாதிக்‍கப்பட்டு பாதிப்பு டெல்லியில் உள்ள ராணுவத்தின் ஆர்.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் பிரணாப்பின் மூளையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது மூளையில் இருந்த ரத்தக்கட்டி அகற்றப்பட்டது. இருப்பினும் இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் பிரணாப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. மேலும், அவருக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று ராணுவ மருத்துவமனை கூறியுள்ளது. முகர்ஜிக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவி வழங்கப்பட்டு வருகிறது என்று ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்நிலையில், திரு. பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என்று அவரது மகன் திரு. அபிஜித் முகர்ஜி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00