நேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்‍கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோதி - வரி விதிப்பு வெளிப்படைத் தன்மையாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்

Aug 13 2020 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு. பிரதமர் மோதி, நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

"வெளிப்படையான வரி விதிப்பு- நோ்மையான வரை கௌரவித்தல்" என்ற பெயரிலான புதிய திட்டத்தை பிரதமர் திரு. மோதி, இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் திரு. மோதி, மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்று சேருகின்றன என்றும், வரி விதிப்பில் செய்யப்பட்டு உள்ள சீர்திருத்தங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார். நேர்மையாளர்களை பெருமைப்படுத்தும் இந்தத் திட்டம், செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும் என்றும், நியாயமான மற்றும் எளிமையான வரி விதிப்பு என்பது நமது நாட்டின் முக்கியக் கொள்கையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். வரி முறையை எளிமைப்படுத்துவதன் மூலம், நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க முடியும் என்றும், நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டம் மூலம், ஆன்லைன் மூலம் அனைத்து கணக்‍குகளையும் செலுத்தலாம் என்றும், வரிவிதிப்பு முறை வெளிப்படையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் திரு. மோதி குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00