கேரளா தங்கம் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா ஜாமீன் மனு தள்ளுபடி - பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Aug 13 2020 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்க கடத்தல் வழக்கில் முக்‍கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் மற்றும் பைசல் பேரத் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்வப்னா சுரேஷை காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது, 150 கிலோ தங்கத்திற்கு மேல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அமலாக்கத்துறையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.

இதற்கிடையில் ஸ்வப்னா ஜாமீன் கேட்டு தாக்‍கல் செய்த மனு, இன்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் மீண்டும் ஸ்வப்னா ஜெயிலில் அடைக்கப்படுகிறார். ஏற்கனவே என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00