இந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா நாளை மறுதினம் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை

Aug 13 2020 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவின் 74வது சுதந்திரதின விழா நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லி செங்கோட்டையில் அன்று நடைபெறவுள்ள அணிவகுப்புக்‍கான இறுதி ஒத்திகை இன்று நடைபெற்றது.

நாட்டின் 74வது சுதந்திர தின விழா நாளை மறுதினம் கோலாகலமாக எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தேசியக்‍ கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்க விருக்‍கிறார். இதனையொட்டி, டெல்லி செங்கோட்டையில் இறுதி ஒத்திகை இன்று காலை நடைபெற்றது. பிரதமருக்‍கான இடத்தில் அதிகாரி ஒருவர் நின்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். முப்படை வீரர்கள் மிடுக்‍குடன் அணிவகுத்துச் சென்றனர்.

சுதந்திரதின விழா கொண்டாட்டத்தின்போது, அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்‍கும் பொருட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ட்ரோன்கள் மூலம் கண்காணிக்‍கப்படுகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபடாமல் தடுக்‍க எல்லையில் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரையோர பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், கோயம்பேடு மார்கெட், புறநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்‍கப்பட்டுள்ளது. முக்‍கிய இடங்களில் ட்ரோன் விமானம் மூலம் கண்காணிக்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00