சீனாவுடனான லடாக்‍ பிரச்னையில் நாட்டை தவறாக வழி நடத்துகிறார் பிரதமர் மோதி - ராகுல் காந்தி கடும் விமர்சனம்

Sep 16 2020 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவுடனான லடாக்‍ பிரச்னையில் பிரதமர் திரு. நரேந்திர மோதி நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என திரு. ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

சீனாவுடனான ல‌டாக் எல்லைப் பிரச்னை குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், மக்களவையில் நேற்று அறிக்‍கை தாக்‍கல் செய்து விளக்கம் அளித்தார். அப்போது, இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும், இரு நாடுகளுக்‍கும் இடையே மோதல்கள் வலுத்து வருவதாகவும் கூறினார். வரலாற்று உடன்படிக்கையை மதிக்‍காமல், லடாக்‍கில் சீனா சட்டவிரோத ஆக்‍கிரமிப்பை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

திரு. ராஜ்நாத் சிங்கின் அறிக்‍கையை மேற்கோள்காட்டி திரு. ராகுல் காந்தி இன்று ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் திரு. நரேந்திர மோதி, நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்பது பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையிலிருந்து தெளிவாக தெரிவதாக கூறியுள்ளார். சீனா எதிர்ப்பு நிலைப்பாட்டை மத்திய அரசு எப்போது எடுக்கப் போகிறது? என கேள்வி எழுப்பியுள்ள திரு. ராகுல், சீனா அபகரித்துள்ள நமது நிலப்பரப்பை எப்போது பெறுவோம்? என்றும் வினவியுள்ளார். அத்துமீறல்களில் சீனாவின் பெயரை குறிப்பிடுவதில் பயம் வேண்டாம் என்றும் திரு. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00