இந்தியாவில் கொரோனா மறுதொற்று குறித்து கவலை வேண்டாம் - மத்திய அரசு தகவல்

Sep 16 2020 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலன் கிடைத்துள்ளதாகவும், கொரோனா மறுதொற்று குறித்து கவலை வேண்டாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா நிலை குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலின் இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா விளக்‍கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவால், இந்தியாவில் உச்சத்தை எட்ட முடியவில்லை எனக்‍ கூறினார். அந்நாடுகளில் உச்சம் தொட்ட பின்னர், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், தொற்று உச்சத்தில் இருந்தபோது, ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையில் மரணங்கள் நிகழ்ந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நாடுகளின் அனுபவங்களில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்‍கொண்டதாக அவர் கூறினார்.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அமல்படுத்தப்பட்ட மிகத்தீவிர ஊரடங்கால் பலன் கிடைத்துள்ளதாக கூறிய திரு. பார்கவா, உண்மையில் இந்தியாவில் கொரோனாவின் மிகப்பெரிய உச்சத்தை நாம் காணவில்லை என்று தெரிவித்தார். அதுபோன்ற சூழலில், மறுதொற்று என்பது மிகமிக அரிதானது என்றும், இதுகுறித்து மக்‍கள் கவலைப்பட வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00