புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் பணி - ஒப்பந்தத்தை பெற்றது டாட்டா நிறுவனம்

Sep 17 2020 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை 862 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணி ஒப்பந்தத்தை டாட்டா நிறுவனம் பெற்றுள்ளது.

டெல்லியில் சவுத் பிளாக்கிற்கு அருகே சென்ட்ரல் விஸ்டா என அழைக்கப்படும் பகுதியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம், அரசு துறைகளுக்கான 8 கட்டடங்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தின் மேற்பகுதியில் அசோகச் சின்னம் நிறுவப்பட உள்ளது. இந்தப் பணி ஒப்பந்தத்தைப் பெற 7 நிறுவனங்கள் விண்ணப்பித்ததில் நிதி முறையிலான டெண்டருக்கு டாட்டா, எல் அண்டு டி, சபூர்ஜி பலோன்ஜி கம்பெனி ஆகிய 3 நிறுவனங்கள் தகுதிபெற்றன. அவற்றின் விண்ணப்பங்களை மத்தியப் பொதுப்பணித் துறை பிரித்துப் பார்த்தது.

அதில் 861 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டிருந்த டாட்டா நிறுவனத்துக்குக் கட்டடப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. எல் அண்டு டி நிறுவனம் 865 கோடி ரூபாய்க்குப் பணி ஒப்பந்தத்தைக் கேட்டிருந்தது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுற்றதும் புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00