ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டமில்‌‌‌லை - ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் விளக்கம்

Sep 17 2020 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் திரு. பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்க உள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதற்கான டெண்டர் 2021-ம் ஆண்டு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் திரு. பியுஷ் கோயல், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதே சமயம் 2030ம் ஆண்டு வரை ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவது, மேம்படுத்துவது, நவீனப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களுக்கு 50 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக அவர் கூறினார்.

இந்த நிதி பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகவும், பயணிகளுக்கு தரமான ரயில் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காகவும் சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும் PPP எனப்படும் Public and Private Partnership முன்மாதிரியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் திரு. பியுஷ் கோயல் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00