டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கலவரம் - 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Sep 17 2020 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக 17 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாஃப்ராபாத், ஷாகுர் பஸ்தி, சிவ் விஹார், சீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் சிஏஏவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் கலவரம் மூண்டு 53 பேர் கொல்லப்பட்டனர். 581 பேர் காயமடைந்தனர். அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் இந்தியாவிற்கு வருகையின்போது இந்த கலவரம் டெல்லியில் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார், 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அதில், 15 பேர் மீது கடுமையான சட்டமான சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உள்ள 747 சாட்சியங்க​ளில் 51 பேர் சாட்சியங்கள் நீதிபதி முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கூடுதல் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களின் வாட்ஸ் ஆப் சாட்கள், சிடிகளில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00