சீனாவுடன் நிலவும் எல்லைப் பிரச்சினை - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று அறிக்கை தாக்கல்

Sep 17 2020 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய படைகளே எல்லையில் உடன்படிக்‍கைகளை மீறுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ள நிலையில், இரு நாடுகள் இடையேயான எல்லைப் பிரச்னை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று அறிக்‍கை தாக்‍கல் செய்யவுள்ளார்.

சீனாவுடனான ல‌டாக் எல்லைப் பிரச்னை குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், மக்களவையில் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தார். அப்போது, இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும், இரு நாடுகளுக்‍கும் இடையே மோதல்கள் வலுத்து வருவதாகவும் கூறினார். வரலாற்று உடன்படிக்கையை மதிக்‍காமல், லடாக்‍கில் சீனா சட்டவிரோத ஆக்‍கிரமிப்பை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

இதற்கு சீனா தரப்பில் பதில் அளிக்‍கப்பட்டது. தற்போதைய எல்லை பிரச்சனைகளுக்‍குப் பொறுப்பு சீனா இல்லை என்றும், இந்தியப் படைகளே உடன்படிக்கைகளை மீறுவதாகவும், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார். தன் தவறுகளை திருத்திக்‍கொண்டு, இந்தியா படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிலையில், சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று அறிக்‍கை தாக்‍கல் செய்யவுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00