கிழக்கு லடாக் பகுதியில் போரை எதிர்கொள்ள தயார் - இந்திய ராணுவம் உறுதி

Sep 17 2020 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
கிழக்கு லடாக்கில் அத்துமீறும் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் உறுதிபட தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன படைகள் அத்துமீறுவதும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும் அப்பகுதியில் படைகளை குவித்து வரும் சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், சீன அரசின் அதிகாரபூர்வ நாளேடான 'குளோபல் டைம்ஸ்', "லடாக்கில் இந்தியாவின் செயல்பாட்டு தளவாடங்கள் போதுமான அளவில் தயாரிக்கப்படவில்லை என்றும், குளிர்காலத்தில் திறம்பட செயல்பட முடியாது எனவும் இந்திய ராணுவத்ததை குறைத்து மதிப்பிட்டு செய்தி வெளியிட்டது.

இதற்கு பதில் அளித்துள்ள வடக்கு பிராந்திய ராணுவ கட்டளையின் செய்தி தொடர்பாளர், இந்தியா அமைதியை நேசிக்கிற ஒரு நாடு என்றும், அதன் அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்துக்கொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா எப்போதும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு லடாக்கில் சீனாவுக்கு எதிராக முழு அளவிலான போருக்கு இந்திய ராணுவம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00