பிரதமர் நரேந்திர மோதியின் 70-வது பிறந்தநாள் - குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து

Sep 17 2020 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு. நரேந்திர மோதியின் 70-வது பிறந்தநாளையொட்டி, குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், திரு. ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வதேச தலைவர்களும் வாழ்த்தியுள்ளனர்.

பிரதமர் திரு. நரேந்திர மோதியின் 70-வது பிறந்தநாளையொட்டி பா.ஜ.கவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் அடுத்த மாதம் 2-ம் தேதி வரை, சுமார் 3 வாரங்களுக்கு கொண்டாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். திரு. மோதிக்‍கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு, திரு. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஷ்ய அதிபர் புதின், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி உள்ளிட்டோரும் திரு. மோதிக்‍கு வாழ்த்து கூறியுள்ளனர். ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் திரு. நரேந்திர மோதி, நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரதமர் திரு. மோதி தனது தாய்க்‍கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு, ஆங்கில புத்தகமாக இன்று வெளியிடப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00