நடிகை ரியா, பிணவறைக்கு சென்றதில் விதிமுறை மீறல் இல்லை : மனித உரிமை ஆணையம் அறிவிப்பு

Sep 18 2020 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுஷாந்த் சிங்கின் உடலை பார்க்க நடிகை ரியா பிணவறைக்கு சென்றதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்‍கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுஷாந்தின் உடலை, அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி நேரில் சென்று பார்த்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து சுஷாந்தின் உடலை பார்க்க நடிகை ரியா, மருத்துவமனையின் தடை செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறைக்‍குள் சென்றதாக செய்திகள் வெளியாகின. இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், சுஷாந்தின் உடலை பார்க்க நடிகை ரியா பிணவறைக்கு சென்றதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில், மருத்துவமனை நிர்வாகமோ, போலீசாரோ எந்த தவறும் செய்யவில்லை எனவும் மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00