ஐக்‍கிய அரபு அமீரகத்தில் இருந்து மதநூல்கள், 18,000 கிலோ பேரிச்சம்பழம் சட்டவிரோதமாக இறக்‍குமதி - கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்‍குப்பதிவு

Sep 19 2020 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐக்‍கிய அரபு அமீரகத்தில் இருந்து மதநூல்கள், 18,000 கிலோ பேரிச்சம்பழம் ஆகியவற்றை சட்டவிரோதமாக இறக்‍குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்‍குப்பதிவு செய்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தூதரகம் வழியாக துபாயில் இருந்து இஸ்லாமிய மதநூல்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த பார்சலில் தங்கம், வெளிநாட்டு கரன்சி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கேரள அமைச்சர் திரு. ஜலீலிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணையில், மதநூல்கள், 18 ஆயிரம் கிலோ பேரிச்சம்பழம் ஆகியவை சட்டவிரோதமாக இறக்‍குமதி செய்யப்பட்டதை அமைச்சர் திரு. ஜலீல் ஒப்புக்‍கொண்டதாகக்‍ கூறப்படுகிறது. இதையடுத்து, கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்‍குப்பதிவு செய்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00