கேரளா, மேற்குவங்கத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை - 9 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது

Sep 19 2020 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவின் முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடியாக கைது செய்துள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்புக்‍கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலும், மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், கூர்மையான ஆயுதங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், உடல் கவசம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானை தளமாகக் கொண்டவர்கள் என்றும், இந்தியாவின் முக்‍கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்கள் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00