வங்கி திவால் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் - கடனை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்‍கை எடுப்பது ஒத்திவைப்பு

Sep 19 2020 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு காலத்தில் கடனை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்‍கும் வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

வங்கிகளில் கடன் பெற்று, அதை செலுத்தாமல் உள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் மீது, கடன் நொடிப்பு திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். இதனிடையே, கொரோனா பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், அந்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை கருத்தில் கொண்டு வங்கி திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கும் வகையில் கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டம்-2020-ல் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த அவசரச் சட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை, நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், கடந்த 15-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா பல்வேறு கட்ட விவாதங்களுக்கு பிறகு இன்று நிறைவேறியது. இந்த மசோதா மூலம், ஊரடங்கு காலத்தில் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், கடந்த மார்ச் 25ம் தேதிக்கு முன்புவரை கடன் வாங்கி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00