டெல்லியில் பாதுகாப்பு ஆவணங்களை வைத்திருந்த புகாரில் பத்திரிகையாளர் கைது - இந்தியா-சீனா உடன்படிக்கை குறித்த வீடியோக்‍களை வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு

Sep 19 2020 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் பாதுகாப்பு ஆவணங்களை வைத்திருந்ததாக பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஃபிரீலான்ஸ் பத்திரிகையாளரான ராஜீவ் சர்மா, "ராஜீவ் கிஷ்கிந்தா" என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர், எல்லைப்பிரச்சினை தொடர்பான இந்தியா-சீனா உடன்படிக்கை குறித்தும், தற்போதைய ஊடகங்களின் நிலை குறித்தும் கடந்த 14-ம் தேதி 2 வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோக்களில் இந்திய-சீன உடன்படிக்கை குறித்த சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருந்ததால், அன்றே அவர் கைது செய்யப்பட்டார். அவரை 6 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்கள் அவரிடம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் ராஜீவ் சர்மா கைது செய்யப்பட்டார். டிவிட்டர், லிங்க்டின் உள்ளிட்ட தளங்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு தொடர்பான கட்டுரைகளை எழுதியதாகவும், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00