மத்திய அரசு கொண்டுவந்துள்ள, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு -ஹரியானாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்பு

Sep 20 2020 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

விவசாயிகளின் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள், இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலும் இந்த சட்டங்கள் இருப்பதாக விவசாயிகள், அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.

மத்திய அரசின் இந்த சட்டங்களை கண்டித்து, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், தண்ணீரைப் பீய்ச்சியடித்து, விவசாயிகளை விரட்டியடித்தனர். போராட்டக்காரர்கள் போலீசார் தடுப்பை மீறிச் செல்ல முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வேளாண் சட்டங்களை கண்டித்து, ஹரியானா மாநிலம், Sirsa பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலையில் அமர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00