இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் பாலியல் புகார் : பாலிவுட் முழுவதும் பாலியல் ரீதியாக வேட்டையாடுவோர் உள்ளனர் - கங்கனா

Sep 20 2020 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது, நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம், பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் அனுராக் காஷ்யப் மீது, பிரபல நடிகையான பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து, டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் பிரதமர் திரு.மோதியை Tag செய்துள்ள அவர், இந்த பதிவால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், அதனால் தயவு செய்து உதவுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். நடிகை பாயல் கோஷின் இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ள நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட்டில் நடிகைகளை பாலியல் ரீதியாக வேட்டையாடுவோர் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் இளம் நடிகைகளுக்கு மட்டுமல்லாமல், சில இளம் நடிகர்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் இருப்பதாகவும் கங்கனா குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00