ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆறு மாதங்களுக்குப் பின், இன்று திறப்பு : நாளொன்றுக்கு 5 ஆயிரம் சுற்றுலா பயணியகளுக்கு மட்டுமே அனுமதி

Sep 21 2020 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆறு மாதங்களுக்குப் பின்னர், இன்று திறக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ்மஹால், மார்ச் மாதம் 17ம் தேதி மூடப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், புராதனச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பின்னர், சுற்றுலா பயணியருக்காக, தாஜ்மஹால் இன்று திறக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு, 5,000 சுற்றுலா பயணியருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ரா கோட்டையும் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், ஒரு நாளுக்கு, 2,500 பேருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், சுற்றுலா பயணியருக்கு விதிக்கப்பட்டுள்ளன. உரிமம் பெற்ற வழிகாட்டிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஆக்ரா கோட்டை, ஞாயிற்றுக் கிழமையிலும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00