மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி இன்று முதல் பள்ளிகள் திறப்பு : ஆந்திரா, அசாம், மாநிலங்களில் வகுப்புகள் தொடங்குகின்றன

Sep 21 2020 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, ஒன்பது முதல், 12ம் வகுப்பு வரையில், விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு, இன்று முதல், பள்ளிகளை துவக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வகுப்புகள் துவங்குகின்றன.

முதற்கட்டமாக, 15 நாட்களுக்கு, வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டில்லி, குஜராத், கேரளா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கர்நாடகா, பீஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், பள்ளிகள் திறக்கப்படாது என, அந்தந்த அரசுகள் தெரிவித்து உள்ளன. திறக்கப்படும் பள்ளிகளில், உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, கிருமி நாசினி பயன்படுத்துவது, முக கவசம் அணிவது, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் இயங்குவது உள்ளிட்ட வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00