முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற நினைப்பதா? : பிரதமர் மோதியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி

Sep 21 2020 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற பிரதமர் திரு. நரேந்திர மோதி நினைப்பதாக காங்கிரஸ் எம்,பி., திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் துறை தொடர்பான, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மோதி அரசால் விவசாயத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தில் குறைந்த ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை - பிரதமர் மோதி விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக மாற்ற நினைக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மத்திய அரசின் இந்த திட்டம் வெற்றி பெற நாடு அனுமதிக்காது என்றும் திரு.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00