எதிர்கட்சிகளின் கடும் அமளிகளுக்கிடையே மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம் : மாநிலங்களவை துணைத்தலைவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்

Sep 21 2020 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண் மசோதா தொடர்பாக மாநிலங்களவை துணைத்தலைவர் திரு. ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவியில் நேற்று நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றக்கூடாது என்றும், மசோதா தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு முழுமையான ஆய்வுக்கு பின்னரே அமல்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்த மாநிலங்களவை துணைத்தலைவர் திரு.ஹரிவன்ஸ், வேளாண் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், திரு. ஹரிவன்ஸ் இருக்கையின் முன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தன்னிச்சையாக முடிவெடுத்த மாநிலங்களவை துணைத்தலைவர் திரு. ஹரிவன்ஸ் மீது, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மாநிலங்களவை செயலரிடம் மனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட 12 கட்சிகளின் உறுப்பினர்கள், நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00